தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் (76) நேற்று (செப்., 10) பிற்பகலில் காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று (செப்., 11) மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.