தீப்பிடித்த காரில் கட்டுக்கட்டாக போலி ரூ.2000 நோட்டுகள்

65பார்த்தது
தீப்பிடித்த காரில் கட்டுக்கட்டாக போலி ரூ.2000 நோட்டுகள்
திருப்பத்தூர் அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்த காரில் கட்டு கட்டாக இருந்த ரூ.2000 நோட்டுக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் கார் ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அது போலி ரூ.2,000 நோட்டுகள் என தெரியவந்தது. மேலும் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்புக்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி