சிவகாசி: புதிய பள்ளி கட்டிடம் திறப்பு..

75பார்த்தது
சிவகாசி அருகே பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்
ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஒன்றியம் பள்ளபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 85லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்தை யூனியன் துணைத் தலைவர் விவேகன்ராஜ் திறந்து வைத்தார். சிவகாசி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கூடுதல் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் மூலம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ. 85லட்சத்து 44 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிட பணிகள் நடைபெற்று வந்தன. வகுப்பறை கட்டிடம் முடிவடைந்த நிலையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். புதிய பள்ளி கட்டிடத்தை சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத் தலைவருமான விவேகன்ராஜ் குத்து விளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கலைமணி, ஊராட்சி மன்ற செயலாளர் செல்லப்பாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி