சிவகாசி: தேச தலைவருக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்..

69பார்த்தது
சிவகாசி அருகே செக்கிழுத்த செம்மல் வ. உ சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கலில் செக்கிலுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின்
153வது பிறந்த தினத்தினை பல்வேறு அரசியல் கட்சியினரும் கொண்டாடி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனார். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள
வ. உ சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான
கே. டி ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி