சென்னை மாநகராட்சி, கல்வித் துறை, மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து 'விங்ஸ் ஆஃப் பிளை' திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி, 2024-25 கல்வியாண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற 8 பேர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.