ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை இணைக்க முடியும். இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. கிராமப்புறங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்து ஆதார் எண்களிலும் ஒரே மொபைல் நம்பரை இணைத்துள்ளனர். இருப்பினும் ஆதார் எண்களை பயன்படுத்தும் போது OTP வரும் என்பதால், ஒரே நம்பரை பயன்படுத்தும் போது சிக்கல் ஏற்படுகிறது. எனவே உங்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணை, உங்களின் ஆதாருடன் இணைத்துக் கொள்வது நல்லது.