சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று (டிச. 09) காலை 6:30-க்கு தனியார் விமானம் கேரளாவுக்கு 155 பேருடன் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதை கண்டறிந்த விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் அனுப்பினார். தொடர்ந்து விமானமானது காலை 7:15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து, பத்திரமாக தரையிறங்கியது.