2025-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிவகாசியில் காலண்டர் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காலண்டர் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுவதுடன், பெங்களூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவகாசியில் உருவாகும் காலண்டர்களை வெளிநாட்டினர் கூட விரும்பி வாங்குவதாக காலண்டர் தொழில் செய்பவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.