சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேநீர் கடை உரிமையாளரான வெங்கடேசன் நேற்று (டிச. 08) இரவு கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வாகனத்தின் முன் பகுதியில் பதுங்கியிருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு வெங்கடேசன் கையை கடித்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.