பாதாம், வாதுமை பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இவை, மூளைக்கு ஊட்டமளித்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. வைட்டமின் டி மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.