பொள்ளாச்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி

61பார்த்தது
பொள்ளாச்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார குக்கிராமங்களில் அதிக அளவு விவசாயம் செய்யப்படுகிறது. விவசாய தேவைக்கும் தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக இவை அணைத்தும் நிரம்பாத நிலையில், தற்போது பெய்த கனமழை காரணமாக ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் நீர் நிலைகளில் மீண்டும் தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி