மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச., 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச., 11) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை, தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.