விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே டிப்பர் லாரியில் சிக்கி டிரைவர் பலி.
விருதுநகர் அடுத்த வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சின்னராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகேசன் (43) டிப்பர் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விருதுநகரில் இயங்கி வரும் தனியார் குவாரியிலிருந்து டிப்பர் லாரியில் சிவகாசிக்கு கிராவல் மண் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அப்போது நாரணாபுரம் ரோட்டில் உள்ள தவமுனிசாமி கோவில் அருகே பட்டாசு கடை முன்பு கிராவல் மண்ணை தட்டியுள்ளார். தொடர்ந்து டிப்பர் லாரியின் பின்பகுதி கீழே இறங்காமல் நின்றுள்ளது. இதனை முருகேசன் சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது மேலே இருந்து லாரியின் பின் பகுதி சட்டென்று கீழே இறங்கி முருகேசன் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவரின் உடலை கைப்பற்றிய சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்