கட்சத்தீவு விவகாரத்தில் 99 வருட குத்தகை ஒப்பந்தமே இடைக்கால தீர்வு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.