திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னன் (55) என்பவர், யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் பயிரிட்டு அசத்தியுள்ளார். ஒரு செடியிலிருந்து நான்கு தினங்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 கிலோ வரை வாட்டர் ஆப்பிள் மகசூல் கிடைத்துள்ளது. ஒரு கிலோ வாட்டர் ஆப்பிள் சந்தையில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனைக்கு போகிறது. நீர்ச்சத்து நிறைந்துள்ள வாட்டர் ஆப்பிளை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களும், கருவுற்ற பெண்களும் அதிகளவில் எடுத்துக்கொள்கின்றனர்.