கச்சத்தீவு கைவிட்டுப் போக ஆட்சி அதிகாரப் பசி கொண்ட திமுகதான் காரணம் என தவெக தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, இன்று வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கபடநாடகமாடுகிறது. தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் திமுக அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தவெக கடுமையாகக் கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.