தமிழகத்தில் உப்பு விலை உயரும் என தகவல்

60பார்த்தது
தமிழகத்தில் உப்பு விலை உயரும் என தகவல்
தமிழகத்தில் தற்போது உப்பு விலை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உப்புகளை வழங்கி வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக 20,000 ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஒரு டன் உப்பு ரூ.2,500 விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு டன் ரூ.8000 வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி