ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று (ஏப்ரல் 4) இரவு 09:01 மணிக்கு ரிலீஸாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.