திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா முழுவதும் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், தலாய் லாமாவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, தலாய் லாமாவுக்கு ஆயுதமேந்திய காவலர்கள் உட்பட மொத்தம் 33 பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.