தமிழ்நாட்டில் அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் காவலர்களை பணியமர்த்த கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் பணியமர்த்தப்படாமல் இருப்பது தொடர்பாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பெண் காவலர்களை அதிகாரிகளின் அலுவலகத்தில் பணியமர்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.