முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சொத்து குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்த போது 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச், 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உள்பட 465 பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.