வீட்டின் கேட் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் பள்ளி சிறுமி பலியானார். பள்ளியில் இருந்து திரும்பி வந்த சிறுமி கேட்டை மூடியபோது திடீரென சரிந்து விழுந்தது. படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.