காதலர் தினத்தன்று வேலூர் கோட்டைக்கு காதல் ஜோடிகள் அதிக அளவில் வருவதுண்டு. தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகள் அத்துமீறவும், சமூக விரோத கும்பல் காதல் ஜோடிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி கோட்டைக்குள் பிப்ரவரி 14 காதல் ஜோடிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் மற்றும் அருங்காட்சியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.