புதுக்கோட்டை மாவட்டத்தில், பூஜை செய்யப்பட்ட ஒற்றை எலுமிச்சை பழம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் ஏலம் போகியுள்ளது. தைப்பூசத்தன்று பழனி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒற்றை எலுமிச்சை பழத்தை ரூ.5.09 லட்சத்திற்கு திருவரங்குளத்தைச் சேர்ந்த நபர் ஏலத்தில் எடுத்துள்ளார். மேலும், பழனியில் அன்னதானத்தின்போது செய்யப்பட்ட மற்றூம் பூஜையில் வைக்கப்பட்ட பழங்கள் ரூ.16,000 முதல் ரூ.40,000 வரை ஏலம் போகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.