ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல்விளக்கு பகுதியில் கார் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.