புதுச்சேரி ரெயின்போ நகரில் 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டிக்கொல்லப்பட்டவர் ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு காவல்துறை டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.