மனைவி மற்ற ஆண்களுடனான பழகுவதையும், காதலிப்பதையும் துரோகமாகக் கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கணவனைத் தவிர மற்ற ஆண்களுடன் மனைவி உடல் ரீதியில் தொடர்பு கொள்ளாத வரை, அந்த உறவை கள்ளத்தொடர்பாக கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்க முடியாது என்றும் நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா தீர்ப்பளித்துள்ளார். ஒரு உறவை விபச்சாரம் அல்லது கள்ளத்தொடர்பு என்று அழைக்க, உடல் ரீதியான தொடர்பும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.