திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. 4 ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்?. துறையை நாசமாக்கிவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்” என்றார்.