இரண்டாவது நாளாக தொட்டும் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம். பணி இழந்து நிற்கும் தொழிலாளர்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் சரவெடிகள் தயாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருளில் பச்சை உப்பு சேர்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசுகள் தயாரிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து, பட்டாசுகள் உற்பத்திக்கு பச்சை உப்பு சேர்ப்பதற்கு அனுமதி வழங்கக் கோரியும், சரவெடிகள் தயாரிக்கவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து, பச்சை உப்பு இல்லாமல் பட்டாசுகள் தயாரிப்பது கடினம் என்பதால், உரிய அனுமதி கிடைக்கும் வரை, டாப்மா சங்கத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகள் அனைத்தும் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரப்பட்டதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெறும் கேள்வி குறியக உள்ளன.