சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,
கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செங்கமலநாச்சியாா்புரம் முதல்நிலை ஊராட்சிப் பகுதியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னேடுத்து வருகின்றது. ஊராட்சியில் உள்ள டீக்கடை, ஓட்டல், பலசரக்கு கடை , சூப்பர் மார்க்கெட் உள்பட கடைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பிளாஸ்டிக் தடை குறித்த அறிவி்ப்பு பலகை வைக்கப்பட்டன. பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையிலும் மஞ்சப்பை அவசியம் குறித்தும் அவ்வப் போது மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இருந்த போதிலும் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது. ஊராட்சியில் ஆங்காங்கேசாலையோரம்,
வாய்க்கால், நீர்நிலைகள்,
புறம்போக்கு நிலங்களில் குப்பைகள்கொட்டப்படுகின்றன. திரும்பிய பக்கம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் காட்சி அளிக்கிறது. பிளாஸ்டிக்கால் சுற்றுச் சூழல், நீர்வளம் பெரும் சீர்கேடு அடைகிறது. சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள் தான் அதிகமாக உள்ளன. இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.