சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததால், விமானத்தில் இருந்த 165 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய விசாரணை குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.