சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று (மார்ச் 30) இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா லெஜண்டஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்கும் சில எச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை எடுத்துக்கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://x.com/ChennaiTraffic/status/1906006240112902444