தள்ளுவண்டி கடை வியாபாரிக்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி கட்ட கூறி நோட்டீஸ்

57பார்த்தது
தள்ளுவண்டி கடை வியாபாரிக்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி கட்ட கூறி நோட்டீஸ்
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். தள்ளுவண்டியில் முட்டை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில், டெல்லியில் தொடங்க நிறுவனத்தில் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும் அதற்காக ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுமன் கூறுகையில், “நான் வண்டியில் முட்டைகளை விற்பனை செய்து வருகிறேன். நான் டெல்லிக்கு சென்றதும் இல்லை, நிறுவனம் தொடங்கவும் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி