விசாகப்பட்டினம் மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற SRH அணி முதல் பேட்டிங் செய்தது. இந்நிலையில் அந்த அணி, 18.4 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. SRH சார்பில் அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். மேலும், கிளாஸன் 32, ஹெட் 22 ரன்கள் எடுத்திருந்தனர். டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.