ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

52பார்த்தது
ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே. தாயில்பட்டியில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரார் ரவிச்சந்திரன் (55), இவர் சல்வார்பட்டியில் பட்டாசு தயார் செய்வதற்கு பயண்படுத்தும் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். கம்பெனியில் மும்முனை இனைப்பு இருக்கும் நிலையில் கூடுதல் மின் இனைப்பு கேட்டு வெம்பக்கோட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். கூடுதல் மின் இனைப்புக்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இனைப்பு வழங்க முடியும் என மின் வாரிய உதவி பொறியாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார். அதில் பல கட்ட பேச்சு வார்த்தை முடிவில் ரூ. 10 ஆயிரம் மட்டு கொடுத்தால் போதும் என முடிவுக்கு வந்தார் உதவி மின் பொறியாளர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத
ரவிச்சந்திரன் விருதுநகரில் உள்ள லஞ்சம் ஒழிப்பு துறையில் மேற்கண்ட சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையில் இன்று மாலை வெம்பக்கோட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்த பொறியாளரிடம் ரசாயனம் தடவிய பணம் ரூ. 10 ஆயிரத்தை கொடுத்த போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் குழுவினர் கையும் களவுமாக உதவி பொறியாளர் சேதுராமனை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி