குஜராத்தில் உள்ள ஸ்தம்பேஸ்வரர் மகாதேவ் கோயில் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கடலுக்கு அருகாமையில் உள்ள இக்கோயிலில் அதிக அலையின் போது, கடல் நீர் கோயிலின் வெளிப்புறத்தையும் உள் கருவறையையும் மூழ்கடிக்கும். ஆனால் 4 அடி உயர சிவலிங்கம் மீது மட்டும் நீர் படாமல் விட்டுச் செல்கிறது. அதன்படி ஒருநாளைக்கு இரண்டு முறையாவது கோயில் மறையும் அதிசயத்தை இங்கு காண முடியும்.