ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கடற்கரை பகுதியில் உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறிய ரக கேமராக்களை டைல்ஸ்-களுக்கு இடையில் ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக பல பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.