பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதீர் (30) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சச்சின் மீனா (23) என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டார். அவர் தனது குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்து சச்சினை மணந்ததால் செய்திகளில் வைரலானார். இந்நிலையில் சச்சின் - சீமா தம்பதி தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளனர். அதன்படி சீமா தனது கர்ப்பத்தை அறிவித்துள்ளார்.