தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், வெற்றிலை சந்தை நடப்பது வழக்கம். டிச., 22 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் வெற்றிலை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலையின் ஆரம்ப விலை ரூ.10,000-க்கு துவங்கி அதிகபட்சம் ரூ.18,000 வரையில் விற்பனையானது.