நடிகர் அல்லு அர்ஜுன் இன்று ஆஜராக ஹைதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 'புஷ்பா 2' திரைப்பட வெளியீட்டின் போது சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இன்று (டிச., 24) காலை 11 மணிக்கு ஆஜராக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காவல்துறை அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பெண் இறந்த விவகாரத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் சில தினங்களுக்கு முன் கைதாகி பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.