திருவள்ளூர்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு (டிச., 23) மதுபோதையில் இளைஞர் ஒருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் அவ்வழியே செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை மறித்து, சாலையில் படுத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.