71 வயதாகும் நடிகர் ரவிக்குமார், பிரபல நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் ஆவர். இருவரும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ரவிகுமார். தற்போது தன்னுடைய மகனுடன் சென்னையில் தான் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக சின்னத்திரையில் இருந்து மொத்தமாக ஒதுங்கினார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரவிகுமார் வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.