மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த போரு காண்டு பின்னார் (30) என்பவர் சென்ற வேனை 3 பேர் கொண்டு கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் மிளகாய்ப் பொடியை வீசி, அவரிடம் இருந்த ரூ.6,85,000 பணத்தை கொள்ளையடித்ததுச் சென்றது. போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய ஆய்வில், திருமண பத்திரிக்கை ஒன்று கிடைத்துள்ளது. அதில் இருந்த கிரண் ஆனந்த லாம்டே (23) என்ற பெயரை வைத்து அவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அவரையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர்.