பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி

56பார்த்தது
பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி
தேனி மாவட்டம் கம்பம் அருகே பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு கடித்ததில், ஹரிகிருஷ்ணன் (21) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முகப்புப் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பு வெளியே வந்துள்ளது. பின்னர், ஹரிகிருஷ்ணனை கடித்துள்ளது. இதனால், செய்வதறியாமல் திகைத்துப்போன இளைஞர், வாகனத்தை நிறுத்தினார். அவருடன் இருந்த நண்பர், இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி