விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேல ஒட்டம் பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவரது பட்டாசு ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஏற்பட்டன. மேலும் அதிகாலை முதல் தற்போது வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருகின்றன. தற்போது பட்டாசு ஆலைகளில் நான்கு அறைகளுக்கு மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. சரக்கு ஏற்ற வந்த லாரி முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது வரை சாத்துார், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து
தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தற்போது தீயணைப்பு வீரர்கள் மும்மரமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளுக்கு பின்னரே வெடிவிபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து தெரியவரும். பத்துக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளன. இச்சம்பவம் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.