இயக்குநரும், நடிகருமான சேரன் 2004ஆம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ஆம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.