சாத்துார் அருகே கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேர் கைது. வாகனங்கள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், கீழராஜகுலராமன் காவல் சரக நிலைய எல்லைக்குட்பட்ட சாமிநாதபுரம் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளப் படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு புகார் மனு வந்தன. மேலும் புகார் மனுவின் பேரில் வெங்கடேஷ் உதவி புவியியலாளர் தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்மாயில் உள்ளே
கோட்டைபட்டியை சேர்ந்த அருள், துலுக்கன்குளத்தை சேர்ந்த மரியப்பன், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும் 2 JCBஇயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் எந்த ஒரு அரசு அனுமதி இல்லாமல், திருட்டுதனமாக சட்டவிரோதமாக கண்மாயில் மணல் அள்ளி வந்ததை கண்டறிப்பட்டன. உடனடியாக கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி புலியியலாளர் வெங்கடேஷ் புகார் கொடுத்து உள்ளார். புகார் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மாரியப்பன், செந்தில்குமார், அருள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய JCB, மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.