பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் மீதான இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 வரை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 60% எண்ணெயின் தேவை இறக்குமதியை நம்பி இருக்கும் நிலையில் தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி வரியை உயர்த்தியிருப்பது சாமானிய மக்களுக்கு சிரமத்தை அளிக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.