குப்பையில் இருந்து வரும் மீத்தேன் வாயு, வாகனங்கள், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை, தேவையற்ற பொருட்களை மண்ணில் போட்டு எரிப்பதால் வெளிவரும் புகை ஆகியவை ஓசோன் மண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓசோன் அழிவதால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. நிலப்பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்கும். மனிதர்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என அனைத்தும் அழிந்து விடும்.