சாத்துார்: பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து-ஆட்சியர்...

76பார்த்தது
சாத்தூர் அருகே வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் விதி மீறி செயல்பட்டதாக உரிமைத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அடுத்த உள்ள குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பட்டாசுக்கு தேவையான மூலப்பொருள்களை இறக்குவதற்காக லோடு ஆட்டோவில் செவல்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மூலப்பொருள்களை பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் இறக்கி வைத்த போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார், மேலும் பட்டாசு தொழிலாளி குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரான பாலமுருகன், போர்மென் கபில்ராஜ் ஆகிய இருவர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கபில்ராஜை கைது செய்து உள்ளனர். மேலும் உரிமையாளர் பாலமுருகனை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை விதிமுறையை மீறி செயல்பட்டதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆலையின் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி